திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் முன்னணி புகைப்படக் கலைஞரும் மற்றும் ஆடியோ மீடியா எஜுகேஷன், வேர்ல்ட்லைட் நிறுவனத்தின் முதன்மை அலுவலருமான செல்வகுமார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசை இசைப்பதையும் இசையை ரசிப்பதையும் வித்தியாசமான கோணங்களில் புகைப்படம் எடுத்துள்ளார்.இந்தப் படங்கள் இப்போது ஏ.ஆர். ரஹ்மான் காலண்டராக வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் பௌண்டேஷனின் நிதியுதவிக்காக ஆடியோ மீடியா எஜூகேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான வேர்ல்ட்லைட் நிறுவனம் இந்த காலண்டரை வெளியிட்டுள்ளது. இந்தக் காலண்டிரின் சிறப்பம்சம் உலகளாவிய கருத்துக்களான இசை, மொழி மற்றும் காதல் இவைகளை தலைப்புகளாகக் கொண்டு இசை மேதை ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மேற்கோள்களுடன் சேர்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது.‘ஏழ்மை என்பது கடந்தகால சரித்திரமாக மட்டுமே காணப்பட வேண்டும்...’ என்னும் ஏ.ஆர்.ரஹ்மான் பௌண்டேஷனின் தொலைநோக்குப் பார்வைவை கருத்தில் கொண்டு, இந்த தொலைநோக்கு குறிக்கோளை அடைவதற்கு முதல்படியாக கல்வி நிறுவனங்களை நிறுவி அந்நிறுவனத்தின் மூலம் உலகத்தரத்திற்கு இணையனான கல்வியையும், அதற்குரிய இதர வசதிகளையும் ஏற்படுத்தி அதத்தகைய கல்விக்கூடங்களில் கல்வி கற்க இயலாதவர்களுக்கும், அதற்கான நிதிவசதியற்ற மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகளும் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் பௌண்டேஷன் தற்பொழுது, சென்னை மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் 30 மாணவ மாணவியருக்கு இலவச இசைக்கல்வியை பயிற்றுவித்து வருகின்றது. இம்மாணவர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசைப்பள்ளியான கே.எம்.மியூசிக் கன்சர்வேட்டரியில் உலகத்தரம் வாய்ந்த ஆசிரியர்களால் இசைக் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. வரும் வருடங்களில் இந்த பௌண்டேஷன் மேலும் அதிகமான எண்ணிக்கையில் மாணவர்களை சேர்த்துக்கொள்ள உத்தேசித்துள்ளது. இவ்வாறு விரிவுபடுத்தப்படும் நோக்கத்தினால் இசையில் ஆர்வமுள்ள மேலும் பல மாணவர்கள் இந்த இலவச இசைப்பயிற்சியினை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
‘ஒரு குழந்தையின் கல்விக்காக செலவிடுவதைவிட சிறந்த முதலீடு எதுவும் இல்லை என்பதே...’ என்னும் ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்தை அவரது பௌண்டேஷன் குழந்தைகளின் கல்விக்காக செலவிடுவதன் மூலம் நிஜமாக்கிக் கொண்டிருக்கிறது.
இது குறித்து செல்வகுமார் ‘பெறும் தருணத்தை விட கொடுக்கும் தருணமே சிறந்தது... நான் ஏ.ஆர்.ரஹ்மான் பௌண்டேஷனுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாகக் கருதுகிறேன். இந்த முயற்சியை ஒவ்வொருவரும் முன் வந்து உறுதுணையாய் இருந்து ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்...’ என்கிறார்.
படத்தில் நடிக்கும் ஹீரோயின். படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்திருந்தாலும், பிரஸ்மீட்டுக்கு அவர் வந்திருந்த கோலம் “ச்சும்மா அதிருதில்லே...” டைப்! முழங்காலுக்கு மேலே ஏறிய ஸ்கர்ட் அணிந்திருந்தார். மினி நமீதா மாதிரி இருக்கீங்களே என்ற காம்பிளிமெண்ட்டை சற்று கவலையோடு ஏற்றுக் கொண்ட அவர், “சும்மா உங்களையெல்லாம் இம்ப்ரஸ் பண்ணலாமேன்னுதான் இப்படி வந்தேன். மற்றபடி வீட்டிலே கூட நைட்டிதான் எனக்கு பிடிக்கும்” என்றார். “இனி சென்னைக்கு வந்து உங்களை சந்திக்கும்போதெல்லாம் இப்படிதான்” என்று அவர் சொன்னது இன்ப அதிர்ச்சி!







0 comments:
Post a Comment