




படத்தில் நடிக்கும் ஹீரோயின். படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்திருந்தாலும், பிரஸ்மீட்டுக்கு அவர் வந்திருந்த கோலம் “ச்சும்மா அதிருதில்லே...” டைப்! முழங்காலுக்கு மேலே ஏறிய ஸ்கர்ட் அணிந்திருந்தார். மினி நமீதா மாதிரி இருக்கீங்களே என்ற காம்பிளிமெண்ட்டை சற்று கவலையோடு ஏற்றுக் கொண்ட அவர், “சும்மா உங்களையெல்லாம் இம்ப்ரஸ் பண்ணலாமேன்னுதான் இப்படி வந்தேன். மற்றபடி வீட்டிலே கூட நைட்டிதான் எனக்கு பிடிக்கும்” என்றார். “இனி சென்னைக்கு வந்து உங்களை சந்திக்கும்போதெல்லாம் இப்படிதான்” என்று அவர் சொன்னது இன்ப அதிர்ச்சி!
ஆடிப்போயிருக்கிறார்கள் தமிழ்சினிமா ஹீரோக்கள். ஒரு சிலரை தவிர மீதி அத்தனை பேரும் அவர் குனிந்து பார்க்கும் உயரத்தில்தான் இருக்கிறார்கள். ‘சிங்கம்’ போல சிலிர்த்தெழும் ஹீரோ ஒருவர் மூன்று அங்குல உயரத்திற்கு ஸ்பெஷல் ஹீல்ஸ் செய்து வைத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்? குளோஸ் அப் காட்சிகளில் இந்த மினி ஸ்டூல்தான் உதவுகிறதாம் அவருக்கு!







0 comments:
Post a Comment