கேரள கிளி என்று நினைத்தால் ஆந்திரா பெசரட்டுவாக இருக்கிறார் சுஹானி. அப்பாவி படத்தில் நடிக்கும் ஹீரோயின். படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்திருந்தாலும், பிரஸ்மீட்டுக்கு அவர் வந்திருந்த கோலம் “ச்சும்மா அதிருதில்லே...” டைப்! முழங்காலுக்கு மேலே ஏறிய ஸ்கர்ட் அணிந்திருந்தார். மினி நமீதா மாதிரி இருக்கீங்களே என்ற காம்பிளிமெண்ட்டை சற்று கவலையோடு ஏற்றுக் கொண்ட அவர், “சும்மா உங்களையெல்லாம் இம்ப்ரஸ் பண்ணலாமேன்னுதான் இப்படி வந்தேன். மற்றபடி வீட்டிலே கூட நைட்டிதான் எனக்கு பிடிக்கும்” என்றார். “இனி சென்னைக்கு வந்து உங்களை சந்திக்கும்போதெல்லாம் இப்படிதான்” என்று அவர் சொன்னது இன்ப அதிர்ச்சி!
அனுஷ்கா
அனுஷ்காவின் உயரத்தை பார்த்து ஆடிப்போயிருக்கிறார்கள் தமிழ்சினிமா ஹீரோக்கள். ஒரு சிலரை தவிர மீதி அத்தனை பேரும் அவர் குனிந்து பார்க்கும் உயரத்தில்தான் இருக்கிறார்கள். ‘சிங்கம்’ போல சிலிர்த்தெழும் ஹீரோ ஒருவர் மூன்று அங்குல உயரத்திற்கு ஸ்பெஷல் ஹீல்ஸ் செய்து வைத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்? குளோஸ் அப் காட்சிகளில் இந்த மினி ஸ்டூல்தான் உதவுகிறதாம் அவருக்கு!
bits for nayan
என்னை பற்றி கிசுகிசு எழுதுகிறவர்கள் வேலையற்றவர்கள் என்று தெலுங்கு பிரஸ் மீட்டில் கொந்தளித்திருக்கிறார் நயன்தாரா. அந்த ஊர்லே உஷ்ணம் கம்மி போலிருக்கு... !
bits for thirisha
தமிழில் வாங்குகிற சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு சம்பளத்தை வாங்கிக் கொண்டுதான் இந்தி கட்டா மிட்டாவில் நடிக்கிறார் த்ரிஷா. இது அறிமுக சலுகையாக்கும்!
bits for remasan
தனது பெயரில் சென்னை கட் பண்ணிவிட்டார் ரீமா(சென்). ஒரு நேமாலஜி நிபுணர் கொடுத்த ஐடியாவாம். நடிகை உட்கார நாற்காலி பூவாச்சு. இப்போது அவரிடம் 3 தெலுங்கு படங்கள்!
bits for tamanna
டயட்டில் இருக்கிறார் லட்சுமி ராய். இந்தி படத்தில் நடிக்கப் போவதால்தான் இந்த முடிவு. த்ரிஷா, அசின், போன போதெல்லாம் பரபரப்பை கிளப்பியவர்கள் இவர் விஷயத்தில் ஏனோ சைலண்ட்?
bits for tamanna
எல்லா நடிகைகளும் சொல்வது மாதிரியே ரஜினியோடு நடிக்கணும் என்கிறார் தமன்னா. ஆனால், அவரு மனசிலே இருப்பது சிம்புதானாம். அவருடன் நடிச்சா ப்ரீ பப்ளிசிடி கிடைக்கும் என்று நினைத்தாரோ என்னவோ?
bits for asin
ஜகன்மோகினியில் தான் நடித்த 30 நிமிட காட்சிகள் வெட்டப்பட்டதால் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறாராம் நிலா. அதுக்காக திரும்ப ஒட்ட வைப்பாங்களாக்கும்?
0 comments:
Post a Comment