ரஜினி குடும்பத்திலிருந்து மூன்று படங்கள் வருகின்றன இந்தப் பொங்கலுக்கு.
ரஜினியின் மகள் சௌந்தர்யா தயாரித்துள்ள கோவா, ரஜினி யின் மருமகன் தனுஷ் நடித்த குட்டி மற்றும் ரஜினி மருமகனின் அண்ணன் செல்வராகவன் இயக்கியுள்ள ஆயிரத்தில் ஒருவன் ஆகியவை இந்தப் பொங்கலில் திரைக்கு வருகின்றன.ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ள படம் ஆயிரத்தில் ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் தனுசும் ஐஸ்வர்யாவும் இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளனர்.
கோவா படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். சினேகா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
குட்டியில் தனுஷுக்கு ஜோடி ஸ்ரேயா. மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கி உள்ளார். தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய ஆர்யாவின் ரீமேக் இப்படம்.
இந்த மூன்று படங்களில் ரஜினி தன் மகள் தயாரித்த கோவா படத்தை அதிகம் எதிர்பார்க்கிறார். இந்த படத்தைதான் அவர் முதலில் பார்க்க விரும்புகிறாராம்.
0 comments:
Post a Comment