18 வயசுப் பையனுடன் படுக்கையறைக் காட்சியில் நடிக்க மறுத்து விட்டாராம் நமீதா .
மலையாளத்தில் முன்பு வெளியாகி வெற்றி பெற்ற ரதி நிர்வேதம் என்ற படத்தை தமிழில் அழகான பொண்ணுதான் என தமிழில் உல்டாவாக்கி எடுத்து வருகிறார்கள்.
இந்தப் படத்தில் விபச்சாரப் பெண்ணாக நடிக்கிறார் நமீதா.
ஒரு காட்சியில் விபச்சார விடுதியில் உள்ள மற்ற பெண்களை விட்டுவிட்டு, நமீதாவை தேர்ந்தெடுக்கிறான் 18 வயசு பையன் (ஹீரோ).
இந்த படுக்கையறைக் காட்சியில் நடிக்க முடியாது என ஆரம்பத்தில் நமீதா மறுத்து விட்டாராம்.
"நான் சரத்குமார், சத்யராஜ், விஜய், அஜீத் ஆகியோருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து இருக்கிறேன். பதினெட்டு வயது பையனுடன் நடிப்பது வசதியாக இல்லை" என மறுத்துள்ளார் நமீதா.
உடனே படத்தின் இயக்குநர் திரு, நமீதாவைச் சமாதானப்படுத்தி, "முதல் 'ஷாட்'டை படமாக்கிப் பார்ப்போம். மானிட்டரில் பார்த்து உங்களுக்கு திருப்தியாக இருந்தால் தொடர்ந்து எடுப்போம்" என்றாராம்.
அதன்பிறகு நமீதா அந்த காட்சியில் நடிக்க ஆரம்பித்தார். முதல் 'ஷாட்'டை மானிட்டரில் பார்த்த அவர், தொடர்ந்து நடிக்க மறுத்து விட்டார்.
இந்தக் காட்சியில் நமீதாவுடன் நடித்தவர் கார்த்தீஸ் என்ற இளைஞர். நமீதா நடிக்க மறுத்ததில் பெரும் ஏமாற்றமடைந்தாராம் அவர்.
0 comments:
Post a Comment