கந்தசாமி படத்தை துவங்கிய போது இரண்டு கிராமங்களை தத்தெடுத்தார் அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு. அப்படத்தின் 100 வது நாள் விழாவின் போது இந்த இரண்டு, முப்பதானது
விழாவையே தேனிக்கு அருகில் உள்ள அந்த இரண்டு கிராமங்களில்தான் நடத்த வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தார் அவர். ஆனால், வானிலை காரணமாக திட்டத்தில் மாற்றம். கிராம மக்களில் சுமார் ஐநூறு பேரை சென்னைக்கே வரவழைத்திருந்தார் தாணு. நடிகர் சங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் திரும்பிய இடத்திலெல்லாம் வேட்டியும், கண்டாங்கி சேலையுமாக நடமாடினார்கள் மக்கள்.வழக்கமாக திரையுலக பிரபலங்கள்தான் படத்தின் நடித்த நடிகர் நடிகைகளுக்கும், டெக்னீஷியன்களுக்கும் ஷீல்டு கொடுப்பார்கள். இங்கே வித்தியாசம். வந்திருந்த கிராம மக்களே ஷீல்டுகளை வழங்கினார்கள்.
உள்ளேயிருப்பதெல்லாம் வெளியே தெரிகிற மாதிரி புடவை அணிந்து வந்தார் ஸ்ரேயா. காதில் பப்படம் ஆட, கையில் ஒரு கதராடையுடன் வந்த மூதாட்டி ஒருவர், ஸ்ரேயாவை அப்படியே அந்த ஆடையால் போர்த்தினார். (ஹ¨ம், அநீதி பொறுக்காத கிழவி...) கிராம மக்களிடம் தனது அன்பை ரொம்பவே தெரிவித்த ஸ்ரேயா, ஒவ்வொரு முறை அவர்கள் மற்றவர்களுக்கு ஷீல்டு கொடுக்க வரும்போது கூட எழுந்து நின்று போஸ் கொடுத்தது ஆச்சர்யம்.
“இதுதான் சரி. இவங்க கொடுக்கிற ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்தான் லட்சங்களாகவும் கோடிகளாகவும் எங்க பாக்கெட்டுக்கு வருது. நியாயமாக இவங்கதான் ஷீல்டு கொடுக்கணும். இதை செய்த தாணுவுக்கு என் நன்றி” என்றார் பாக்யராஜ். டெக்னீஷியன்களுக்கு மட்டுமல்ல, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவிஐபிகளுக்கும் இந்த கிராம மக்களே பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்கள்.
இந்த விழாவின் நெட் ரிசல்ட்? கந்தசாமியைதான் தத்தெடுத்துக் கொண்டது கிராமம்!
0 comments:
Post a Comment