பொங்கலுக்கு கோவா இல்லை! கூடவே மேலும் சில இல்லைகள்... விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளையும், அஜீத்தின் அசலும் கூட இல்லை என்கிறது சில நம்பகமான தகவல்கள்!.கோவா படத்தின் ஆடியோ இம்மாதம் வெளியிடப்படும் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் திடீரென்று ஜனவரி முதல் வாரத்திற்கு தள்ளி போயிருக்கிறது. காரணம், இளைய மேஸ்ட்ரோ யுவன்சங்கர் ராஜாதானாம். பணத்தை செட்டில் செய்தால்தான் டிராக் தருவேன் என்று கூறிவிட்டாராம். இத்தனைக்கும் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு இவருக்கு சகோதரர். நெருக்கமான உறவுகளில் என்னென்ன வருத்தங்களோ?
இவர் டிராக்கை தருவதற்கு லேட் பண்ணியதால் ஆடியோ உரிமையை வாங்கிய சோனி நிறுவனமும் டிலே செய்துவிட்டார்களாம். யுவன் டிராக் கொடுத்து பத்து நாட்கள் கழித்துதான் எங்களால் சி.டிகளை தர முடியும் என்று கூறிவிட்டார்களாம். இதுபோன்ற சிக்கல்களை தொடர்ந்துதான் ரிலீசே தள்ளிப் போகும் என்கிறார்கள்.
காயத்திலே களிம்பை தடவிய மாதிரி ஒரு ஆறுதல். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வர ஒப்புக் கொண்டிருக்கிறார் ரஜினி. ஆனால் சன் டி.வியில் நேரடி ஒளிபரப்பு செய்தால் போதும் என்று கூறிவிட்டா
0 comments:
Post a Comment