சினிமா ரசிகர்களுக்கு இந்தப் பொங்கல் தித்திப்பான பொங்கலாக அமையவிருக்கிறது. ஆனால் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் பாவம்... அவர்களுக்கு எந்தப் படமும் இல்லை.பொங்கல் ரேஸில் ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘கோவா’, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘ஜக்குபாய்’, ‘குட்டி’ ஆகிய படங்கள் மோதுகின்றன. இந்த படங்கள் அத்தனையும் ஒன்றுக்கொன்று சளைக்காதவை என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று தெரிகிறது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம்.‘கோவா’ படத்தை வெங்கட்பிரபு இயக்கியிருக்கிறார் ‘சரோஜா’ டீம் நடித்துள்ளது. எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள விஷால் நடித்து வெளிவரும் படம் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’. ‘ஜக்குபாய்’ சரத்குமார் - ஸ்ரேயா நடித்துள்ள படம். தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து வரும் தனுஷ் நடித்து வெளிவரும் படம் ‘குட்டி’. இந்தப் படங்களில் ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘கோவா’ ஆகிய இரண்டு படங்களும்தான் எதிர்பார்ப்பில் இருக்கின்றன.
தனுஷின் ‘குட்டி’ படம் எப்படி இருந்தாலும் ஓடிவிடும்.. காரணம் தொடர்ந்து வரும் தனுஷின் வெற்றி, இது மட்டுமின்றி இந்தப் படத்தை வெளியிடுவது சன் பிக்சர்ஸ். பின்னே கேட்கவா வேண்டும். ஆயிரத்தில் ஒருவனுக்கும் கோவாவுக்கும்தான் பெரும் போட்டி நடக்கும் என்று தெரிகிறது.
இந்த ரேஸில் ஜெயிப்பது யார் என்பதை ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்...
0 comments:
Post a Comment