
வேட்டைக்காரன் ரிலீஸையொட்டி சிட்டியை சின்னாபின்ன மாக்கிவிட்டார்கள் விஜய் ரசிகர்கள். வடபழனியில் இவர்கள் போட்ட ஆட்டம் மொத்த சிட்டியிலும் எதிரொலித்திருக்கும்.ரஜினிக்கு அப்புறம் அதிக ரசிகர்கள் வருவது விஜய் படத்துக்குதான் என்று ஓபனாகவே ஸ்டேட்மெண்ட் தருகிறார் கமலா திரையரங்க உரிமையாளர் வள்ளியப்பன்.விஜய் படங்கள் கண்டிப்பாக கமலா திரையரங்கில் வெளியாகும் என்பது பகவதி காலத்துக்கு முன்பிருந்தே ரசிகர்கள் அறிந்த செய்தி. விஜய்க்கும் இந்த திரையரங்குதான் பேவரைட்.
வில்லு படத்தின் ரிலீஸின் போதும் தாரை தப்பட்டையுடன் அந்த பகுதியையே கிடுகிடுக்க வைத்தார்கள் ரசிகர்கள். இந்துமுறை கூடுதலாக யானையும் உண்டு. படப்பெட்டியை சுமந்து வந்ததே கஜேந்திரன்தான்.
எல்லாம் சரி, படத்தின் ரிசல்ட் எப்படி?
உணர்ச்சியை உருட்டித்தர இதென்ன சேரன் படமா? நச்சுன்னு நாலு பைட், அழகழகா ஆறு டான்ஸ், அமர்க்களமா ஒரு ஓபனிங், அட்வைஸ் பண்ற மாதிரி ஒரு பாட்டு, ராபின் ஹுட் மாதிரி மனசு, ராம்போ ஸ்டாலோன் மாதிரி மசில் விளையாட்டுன்னு வழக்கம்போல அசத்தியிருக்கார் என்று விஜய் புகழ் பாடுகிறார்கள் அவரது ரசிகர்கள்.
வழக்கம்போல இருப்பதுதான் மற்றவர்களுக்குப் பிரச்சனை. குருவி, வில்லுன்னு ஏற்கனவே பார்த்துட்டோம்ல என்று நெட்டி முறிக்கிறார்கள்.
வேட்டைக்காரன் வெற்றிமுகமா இல்லையா என்பது நாலே நாளில் தெரிந்துவிடும்.
0 comments:
Post a Comment