ஆளுக்கு தகுந்தபடி பாடல் எழுதுவதில் கவிப்பேரரசு வைரமுத்து திறமையானவர். சூழலுக்கு ஏற்பவும் அற்புதமாக எழுதுவார்.
விஜய், அஜித் மோதல் உச்சத்தில் இருந்தபோது அஜித்துக்கு இப்படி எழுதினார். “இமயத்தில் என் கொடி பறந்தால் உனக்கென்ன, எனக்கொரு நண்பனாக இருக்கவும் உனக்கு தகுதியில்லை...”
மோதி விளையாடு படத்தில் சரணின் எதிரிகளை மனதில் வைத்து, உன்னை எதிர்ப்பவன் நிர்வாணமாக நிற்பான் என்று எழுதினார். இதை மேடையில் கவிப்பேரரசே தெரிவித்தார்.
அசல் படத்துக்கும் கவிப்பேரரசுதான் பாடல். சமீபத்தில் இவரது பாடல் ஒன்றை ஏவிஎம்-மில் படமாக்கினர். அஜித்துடன் ஆடியவர் பாவனா. பாடல் இப்படி தொடங்குகிறது.
அதிரி புதிரி பண்ணிக்கடா
எதிரி உனக்கு இல்லைடா...
பாடல் நெடுக தல-யின் புகழை கவிப்பேரரசு வார்த்தையாக்கியிருக்கிறார். பிரமாண்ட அரங்கில் அதைவிட பிரமாண்டமாக எடுத்திருக்கிறார் சரண்.
இரண்டு வரிகளிலேயே பாடல் பட்டையை கிளப்பும் என்பதை யூகித்துவிடலாம்.
0 comments:
Post a Comment