surya's best movie

View Results
Create a Blog Poll

Monday, December 7, 2009

வடக்குன்னா கலகல.. தெற்கேன்னா லகலக

காட்டா மீட்டாவில் நடிக்கும் த்ரிஷா பற்றிதான் இந்தி மீடியாவில் படு ஹாட்டான செய்திகள் வரத் துவங்கியுள்ளதாம் இப்போது.

அக்ஷய் குமாருடன் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து பிசின் போட்ட மாதிரி அவருடன் ஒட்டிக் கொண்டாராம் இந்த மத்ராஸ் மாமி (த்ரிஷாவின் பாலிவுட் செல்லப் பெயர்) முதல் நாள் அம்மா உமா துணையுடன் போனாராம், படப்பிடிப்புக்கு.

அதைப் பார்த்த அக்ஷய், 'ஆண்டிக்கு ஏன் இவ்வளவு சிரமம்... நாங்க பூப்போல பாத்துக்குவோம்' என்ற ரேஞ்சுக்கு வாக்குறுதி தர, அடுத்த நாள் மும்பை கெஸ்ட் ஹவுசிலேயே உமா நின்று விட்டாராம். இப்போது ஸோலோவாகக் கலக்குகிறாராம் அம்மணி.

இந்த ஒத்துழைப்பைப் பார்த்துப் புல்லரித்துப் போன அக்ஷய், அடுத்த படத்துக்கும் ஹீரோயின் த்ரிஷாதான் என 'உயிலே' எழுதி விட்டாராம்... அதாவது அக்ரிமெண்டைச் சொல்றோம்.

அதேநேரம் தெற்கிலிருந்து இப்போது யாரராவது கால்ஷீட் கேட்டு வந்தால் மகா கடுப்புடன் முறைக்கும் நடிகை தரப்பு, கண்டு கொள்ளாமல் அக்ஷய் குமாரின் 'ஆ' ஜோக்குகளைக் கேட்டு ஹாஹாஹா என விழுந்து விழுந்து சிரிப்பதில் முழுகி விடுகிறாராம்.

தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தவர், தமிழில் விக்ரமுடன் நடிப்பதற்கும் நோ சொல்லி விட்டாராம்.

வடநாட்டு பழமும் ஒரு நாள் புளிக்கும்!

0 comments:

Post a Comment

all indian cinema © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute
This template is brought to you by : allblogtools.com Blogger Templates