வருண் மணியன்! கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பிரபலமானார்.
வேறொன்றுமில்லை, ரஜினியின் மகள் சவுந்தர்யா ரஜினிக்கு ஒரு கோடிக்கு மேல் கடன் கொடுத்திருப்பதாகவும், அதை திருப்பி கொடுக்கும் வரையில் சவுந்தர்யா தயாரிப்பில் வெளிவரப்போகும் கோவா படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு போட்டிருந்தார். இவரது மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் கோவா படத்திற்கு இடைக்கால தடையும் விதித்திருந்தது.
பிரபலம் ஆகிவிட்டாலே பிரச்சனைதான் என்று இந்த குளறுபடியை அலசாமல் விட்டு தள்ளியவர்களும் உண்டு. அப்படியா... இருக்குமோ? என்று ஐயப்பட்டவர்களும் உண்டு. இந்நிலையில் மேலும் ஒரு சர்சையை து£ண்டியிருக்கிறார் வருண். நள்ளிரவில் இவரது வீட்டுக்கு வந்த சிலர், வாசலில் நிறுத்தியிருந்த இவரது கார் கண்ணாடியை உடைத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையில் கோவா படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீங்கியிருக்கிறது. ஒரு கோடியே அறுபது லட்சத்தை நீதிமன்றத்தில் சவுந்தர்யா ரஜினி டெபாசிட் செய்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்து கொள்ளலாமாம். கொடுக்கல் வாங்கல் வழக்கு மட்டும் தொடர்ந்து நடக்கும். வருண் தரப்பில் உண்மை இருந்தால், டெபாசிட் செய்யப்பட்ட தொகையிலிருந்து அவருக்கு செல்ல வேண்டிய பணம் சென்று சேரும்.
ஆக, இப்போதைக்கு கோவா குளுகுளு...
0 comments:
Post a Comment