விபாஸனா எனும் புதிய யோகக் கலையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் 'சைஸ் ஜீரோ' புகழ் ஸ்ரேயா.
கடந்த சில தினங்களாகவே ஸ்ரேயாவின் கவனமெல்லாம் முழுக்க முழுக்க தியானம் மற்றும் யோகாவில் லயித்துள்ளது குறித்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
அது உண்மைதான் என நிரூபிக்கும் வகையில், ஸ்ரேயா கிட்டத்தட்ட மௌன விரதம் இருந்து வருகிறாராம் கடந்த சில தினங்களாக.
10 நாள்கள் தொடர்ந்து இந்த பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டுமாம். இதற்காக, தனது அனைத்து படப்பிடிப்புகள், நிகழ்ச்சிகளையும் ஒதுக்கி வைத்துவிட்ட ஸ்ரேயா, மும்பையில் உள்ள யோகா மைத்திலேயே தங்கி இந்த பயிற்சியை கற்று வருகிறார்.
விபாஸனா என்பது இந்தியாவின் மிகப் பழமையான யோகக் கலை. உலகை அதன் நடைமுறை நிஜங்களோடு அணுகுவதுதான் இந்தக் கலையின் மையக் கருத்து. கனவுலகில் கதாநாயகியாகத் திகழும் ஸ்ரேயாவுக்கு இந்த யோகத்தின் மீது நாட்டம் வந்தது ஆச்சர்யம்தான்.
ஆழ்ந்த உள்வாங்கலோடு கற்க வேண்டிய கலை இது என்பதால்தான், ஸ்ரேயா 10 நாளும் தியான மையத்திலேயே தங்கியுள்ளாராம்.
இந்த யோகத்தைக் கற்றுத் தர இந்த மையம் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லையாம். இந்த விபாஸனா யோகத்தின் மூலம் கிடைத்த பலனை அதைப் பெற்றவர்கள் உலகுக்குச் சொன்னால் போதுமாம்.
அப்ப இனி ஸ்ரேயாவிடமிருந்து நிறைய விபாஸனா உரைகளைக் கேட்கலாம்!
0 comments:
Post a Comment