தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஓடி ஓடிச் சம்பாதித்த பணத்தை உஷாராகத்தான் முதலீடு செய்துள்ளார் த்ரிஷா.
த்ரிஷாவின் அப்பா கிருஷ்ணன் ஹோட்டல் தொழிலில் அனுபவம் உள்ளவர். சென்னையில் ஒரு பிரபல ஹோட்டலில் மேனேஜராக பணியாற்றி வந்தார் அவர்.
சொந்தமாக அவர் ஹோட்டல் கட்ட ஆசைப்பட்டார். ஆனால் அதற்கு அப்போது வழியில்லாமல் இருந்தது.
இப்போது கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் மகள் மூலம் அவரது ஆசை நிறைவேறப் போகிறது.
ஹைதராபாத் நகரில் சொந்தமாக இடம் வாங்கி பெரிய நட்சத்திர ஹோட்டல் கட்ட தயாராகி வருகிறாராம் த்ரிஷா.
நகரின் முக்கிய பகுதியில் நவீன வசதிகளோடு உருவாகவிருக்கும் இந்த ஹோட்டல் குறித்து முன்பு கேள்வி எழுப்பினர். ஆனால் அதுபற்றி எதுவும் கூறாமல் மழுப்பி விட்டார் த்ரிஷா.
இப்போது கமுக்கமாக ஹோட்டலுக்கான பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளாராம். இன்னும் இரு ஆண்டுகளுக்குள் முழுமையாக இந்த ஹோட்டல் கட்டி முடிக்கப்பட்டுவிடுமாம்.
த்ரிஷா இப்போது தமிழில் ஒரு படம் மட்டுமே நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்துள்ள லிமோ வெங்கடேசா விரைவில் வெளியாகிறது. இந்தியில் அக்ஷய் குமாருடன் நடிக்கும் இந்திப் படத்தில்தான் இப்போது அவரது முழு கவனமும் உள்ளதாம்.
0 comments:
Post a Comment