
நினைவில் நின்ற மலர். தலைப்பிலேயே ரத்தத்தை கசிய விடும் டைட்டில்களுக்கு மத்தியில் ஏ.சி யை ஆன் பண்ணிய மாதிரி குளுகுளு காதல் டைட்டில் வைத்திருக்கிறார்கள் ஒரு படத்திற்கு. அதுவும் வெளிநாட்டில் தயாராகும் தமிழ் படத்திற்கு.
ஏவிஐ மூவி மேக்கர்ஸ் சார்பாக கிரிஸ்டல் ஜெயராஜ் தயாரிக்கும் படம் இது. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்களாம். முக்கோண காதலை மையமாக வைத்து உருவாக்கப்படும் இப்படத்தை சுபாஷ் பொக்காசம் இயக்குகிறார். கதை?
மாடல் அழகியான சினேகா ராமனின் வாழ்வில் குறுக்கிடும் இரு இளைஞர்கள் ரிஷி மற்றும் கான். சாஃப்ட்வேர் என்ஜினியரான கான், வெளிநாட்டிற்கு வேலை தேடிக் செல்கிறார். அங்கே மாடல் அழகியான சினேகாவை சந்திக்கிறார். கண்டதும் காதல்! மெல்ல மெல்ல வளரும் இந்த காதலுக்கு திடீர் சோதனை. விபத்தில் இறக்கிறார் கான். அதிர்ந்து போகும் சினேகா, அவரை மறக்க முடியாமல் தவிக்கிறார்.
ஆனால் ஒரு முறை மட்டுமே மலரக்கூடியதா காதல்? ரிஷியின் வடிவில் மறுபடியும் காதல் வருகிறது சினேகாவுக்கு. இந்த முறை ரிஷியின் குடும்பத்தில் பிரச்சனை பேயாட்டம் போடுகிறது. இதையெல்லாம் மீறி இருவரும் இணைந்தார்களா என்பது க்ளைமாக்ஸ். வழக்கமான முக்கோண காதலை சொன்னாலும், சொல்லியிருக்கும் விதத்தில் சூப்பர்டா போட வைக்கிறார்களாம்.
பி.கு- நிழல்கள் ரவி, கிரேன் மனோகர், அம்பிகா, சபீதா தவிர படத்தில் நடித்திருப்பவர்கள் எல்லாருமே வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள்தானாம்.
0 comments:
Post a Comment