வெடிகுண்டு முருகேசன் படத்தை ரொம்பவே நம்பியிருந்தார் ஜோதிர்மயி. ஆனால் ரிசல்ட் என்னவோ புஸ்.... இதனால் அப்செட் ஆன ஜோதி, சட்டுபுட்டென்று சொந்த மாநிலத்திற்கே திரும்பினார். ஆனால் போன இடத்திலேயும் பிக்கல், பிடுங்கல்.
மீண்டும் தமிழே சரணம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். முதல் கட்டமாக தனது ‘தெறமையை’ நிரூபிக்கும் விதத்தில் விதவிதமான ஸ்டில்களை எடுத்து உலவ விட்டிருக்கிறார். அழகும் இருக்கிறது. நடிப்பும் வருகிறது. சம்பள விஷயத்திலும் சண்டித்தனம் செய்வதில்லை. இவ்வளவு குவாலிபிகேஷன் இருந்தும், ஜோதிர்மயி காட்டில் தொடர்ந்து வறட்சி. சும்மாங்காட்டியும் கல்யாணம் ஆன டான்ஸ் மாஸ்டர்களை லவ் பண்ணணும். சாயங்காலம் ஆன சரக்கடிச்சுட்டு வம்பளக்கணும். இப்படியெல்லாம் இருந்தால்தானே வாய்ப்பு கொடுப்பார்கள்?
இது எதையும் செய்ய முன்வராத ஜோதிர்மயி, “பெரியார் மாதிரி நல்ல படம் கிடைச்சாலும் நடிப்பேன்” என்கிறார். யாராவது இந்த பக்கம் எட்டிப்பாருங்களேன் சார்...
0 comments:
Post a Comment